search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் ரம்மி"

    • மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு அனுராக்சிங் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
    • தமிழக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க உள்ளது

    புதுடெல்லி:

    ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்றும், சில மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன என்றும் மத்திய மந்திரி கூறி உள்ளார். மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அம்சங்களை இயற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என கூறி தமிழக ஆளுநர் ரவி, மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என கூறியிருந்தார். மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 

    • வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
    • தனிமையில் இருந்த யோகேஸ்வர பாண்டியன் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கல்வி கடன் வழங்கும் கிளை இயங்கி வருகிறது. இங்கு விருதுநகரை சேர்ந்த மதிமுத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் (வயது38). உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் காட்பாடி வி.ஜிராவ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். அதனை ஈடு கட்டுவதற்காக வங்கியில் கல்வி கடன் வாங்கிய மாணவ மாணவிகள் தவணை செலுத்திய இன்சூரன்ஸ் பிரீமியம் பணம் மற்றும் சிலரின் கல்விக் கடனை கையாடல் செய்து அந்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் தனது 2 வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.

    இது பற்றிய தகவல் தெரியவந்ததும் வங்கி மேலாளர் சிவக்குமார் ஆய்வு செய்தார். அப்போது யோகேஸ்வரபாண்டியன் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 137 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 கையாடல் செய்தது தெரிய வந்தது.

    புகாரின் பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வர பாண்டியனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    விருதுநகரை சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் நல்ல குடும்பப் பின்னணியில் உள்ளவர். இவருடைய மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    தனிமையில் இருந்த அவர் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார். முதலில் சிறிய அளவில் பணத்தை செலுத்தினார். பின்னர் விட்ட பணத்தை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக பெரிய தொகைகளை செலுத்த ஆரம்பித்தார்.

    ஆன்லைனில் மூழ்கி அடிமையான அவர் மீள முடியாமல் வேலை பார்த்த இடத்திலும் பணத்தை கையாடல் செய்ய துணிந்தார். அதன்படி வாங்கி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ரூ.34 லட்சம் கையாடல் செய்து ரம்மி விளையாடியுள்ளார்.

    அந்த பணத்தை அதில் இழந்தார். மேலும் அவர் தனது சொந்த பணம் ரூ.10 லட்சம் ரம்மி விளையாட்டில் இழந்ததாக தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் ரூ.45 லட்சம் வரை அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார்.

    தான் தவறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தவறுக்கு தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் என்ன செய்வது என அவர் மனம் வருந்தினார்.

    தற்போது அவரது வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டு விட்டது. நல்ல நிலையில் இருந்த அவர் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ரம்மி விளையாட்டு போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
    • அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதவில்லை என்பதை அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கல்வி என்பது நல்ல நிலையில் இருந்தாலும் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விகிதம் குறைந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள், நல்ல விளையாட்டு மைதானம், இலவசமாக பொருட்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் அரசு பள்ளிக்கு ஏன் மாணவர்கள் செல்வதில்லை. அங்கு தேர்ச்சி விகிதமும், மாணவர் சேர்க்கையும் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை கொண்டு வரும்போது இந்த சட்டத்தில் உள்ள பிரச்சினைகள், நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா என்பது போன்ற கேள்விகளை தான் கவர்னர் கேட்டுள்ளார். உண்மை நிலையை புரிந்துகொண்டு மக்களை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக கவர்னர் மீது பழி சுமத்தக்கூடாது.

    அரசு இதனை கவுரவ பிரச்சினையாக பார்க்காமல் கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்தை பலமாக கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்.

    அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட தலைவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணியில் சிக்கலை உருவாக்கும். இதுதொடர்பான தகவல்கள் தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு கடந்த வாரம் ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது அனைத்து பா.ஜ.க. தலைவர்களையும் அழைத்து இனிமேல் இதுபோன்ற எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அளித்துள்ளார். வரும் காலத்தில் இவையெல்லாம் சரியாகி விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் பலர் கடனாளியாகி உள்ளனர்.
    • தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

    சென்னை:

    40 பேரின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிக்க மறுக்கும் கவர்னர் ரவியை கண்டித்து சென்னை மிண்ட் மணிகூண்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

    மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். தமிழக கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    40-க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை தமிழக கவர்னர் ரவி நிலுவையில் வைத்து சூதாட்ட முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆணவ போக்குடன் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் பலர் கடனாளியாகி உள்ளனர். தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். கடந்த நான்கு மாதங்களுக்குள் 12 பேர் இறந்து உள்ளனர்.

    பலர் லட்சாதிபதி ஆகும் என்ற கனவில் பல லட்சங்களை இழந்து உள்ளனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு பொதுமக்களிடம் நடத்திய கருத்து கேட்பு ஆய்வு அறிக்கையில் ஆன்லைன் ரம்மிக்கு உடனடியாக தடை சட்டம் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் அமலாகும் வரை கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நீதி இருக்கிறது.
    • 17 மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டங்கள் உள்ளன.

    சென்னை:

    சபாநாயகர் அப்பாவு சென்னை கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் அந்த அவசர சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் ஒரு சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    கவர்னருக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறி இருக்கிறது. கவர்னர் விளக்கம் கேட்கலாம். சட்டமன்றத்தின் முடிவுக்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதி 200-ல் உள்ளது. சட்டமன்றம் புனிதமானது. மாண்புடையது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனவே கவர்னர் திரும்பவும் படித்து பார்த்து இருக்க வேண்டும். தான் பயன்படுத்திய வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நீதி இருக்கிறது. இது திறமை சார்ந்த விளையாட்டு. ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ளது என்று சட்ட ஆணைய விதி 276-ல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்கள் பட்டியலில் விதி 34-ல் கேம் ஆப் சான்ஸ் என்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்து ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார்.

    2021 டிசம்பர் 3-ந்தேதி மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் வைகோ, கனிமொழி சோமு, சுசில் மோடி ஆகியோர் ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டியதின் அவசியம் பற்றி பேசினார்கள். அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் இதை ஸ்கில்கேம் அல்ல. கில்கேம் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது மாநில பட்டியலில்தான் இருப்பதாக கூறப்பட்டது. 17 மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டங்கள் உள்ளன.

    இவைகளின் அடிப்படையில்தான் 2022 அக்டோபர் 19-ந்தேதி சட்டமன்றத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. அதுவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த குழு 10,735 பேரிடம் கருத்து கேட்டது. அதில் 10 ஆயிரத்து 708 பேர் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சட்டங்களை அறிந்தும், தெரிந்தும் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் எந்த தவறும் இருந்ததாக தெரியவில்லை.

    கவர்னர் தீர ஆராய்ந்து முடிவு செய்திருக்க வேண்டும். அவசர சட்டத்துக்கு அனுமதி தந்து விட்டு இப்போது ஏன் எதிராக இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதன் மூலம் கவர்னர் இந்த சட்டத்துக்கு எதிராகவே இருந்துள்ளதாக தெரிகிறது.

    ஆன்லைன் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கவர்னரை சந்தித்து இருக்கிறார்கள். அது என்ன காரணம் என்று தெரியவில்லை. நமது சட்டத்துறை அமைச்சரும் கவர்னரை சந்தித்து விளக்கம் அளித்தார். எனவே ஒப்புதல் அளித்து விடுவார் என்று நம்பினோம். ஆனால் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பார் என்று தெரிகிறது. அது என்ன அழுத்தம் என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
    • ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மாநில பட்டியலில் உள்ளதாக மத்திய அமைச்சரே கூறி உள்ளார்.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் தாமதப்படுத்தி, திருப்பி அனுப்பியதற்கான காரணம் தெரியவில்லை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது விளக்கம் கேட்கலாம்.

    * சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என எந்த சட்டத்தை ஆளுநர் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. அவசர சட்டத்திற்கும் சட்ட முன்வடிவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

    * ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

    * ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது எப்படி?

    * நீதிபதி சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டுவரப்பட்டது. அரசியல் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    * ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட விவகாரத்தில் ஆளுநருக்கு என்ன அழுத்தம் வந்தது என்பது தெரியவில்லை.

    * ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மாநில பட்டியலில் உள்ளதாக மத்திய அமைச்சரே கூறி உள்ளார்.

    * சட்டம் இயற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை அரசியலமைப்பு சட்டத்தை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம்.
    • ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காத கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பாக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    இன்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு, கண்காட்சி புத்தகத்தில் பாராட்டி எழுதினார்.

    பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

    முதல்வரின் அயராத உழைப்பால் முன்னேறி இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்பட கண்காட்சி அமைந்து இருக்கிறது.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கூட்டணிக்கு விசிக வர வேண்டும் என பேசி இருக்கிறார். அவருடைய அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருந்து வருகிறோம். திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டு செல்ல இருப்பதே அடுத்த கட்ட பணி.

    ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காத கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் சட்டத்தின் காரணத்தை கூறும் கவர்னர் மனிதாபிமான அடிப்படையில் கூட முடிவு எடுப்பதற்கு ஏன் யோசிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • ஆன்லைன் ரம்மி விளையாடி 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது அவர் கூறியதாவது

    சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக நிராகரிக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் ரம்மி திறன் மேம்பாட்டு விளையாட்டு என கூறி ஆளுநர் நிராகரித்துள்ளார். திறமையின் அடிப்படையில் விளையாடக்கூடிய விளையாட்டு ஆன்லைன் ரம்மி இல்லை.

    ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்ட மசோதா வரும் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். இந்த சட்ட விஷயத்தில் ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளோம். ஆன்லைன் ரம்மி விளையாடி 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 12 பேர் உயிழப்புககு யார் காரணம்?

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

    • ஆளுநரின் இந்த காலதாமதத்தை சுட்டிக்காட்டி பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
    • 4 மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக விளக்கம் கேட்டிருக்கிறார்

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள், ஏராளமான உயிர்களை காவு வாங்கி உள்ளது. இந்த சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்வது தொடர்பாக தமிழக சட்டசபையில் சட்டமசேதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ஒப்புதல் அளிக்கவில்லை. பின்னர், சட்ட மசோதா தொடர்பாக சில சந்தேகங்களை ஆளுநர் ஆர்என் ரவி கேட்டிருந்தார். அதற்கு தமிழ்நாடு அரசு  பதிலளித்தது. ஆனாலும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்தினார். ஆளுநரின் இந்த காலதாமதத்தை சுட்டிக்காட்டி பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

    ஆன்லைன் ரம்மியால் இதுவரை 44 பேர் இறந்துள்ள நிலையில், தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். எனினும் ஆளுநர் செவிசாய்க்கவில்லை.

    இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர் ரவி. 4 மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது. கூடுதலாக விளக்கம் அளிக்கும்படி, அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனை அடைந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்.
    • கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சுரேஷ் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சுரேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ராதா, வீட்டில் இருந்த கணவரின் செல்போனை ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் "ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன். எனவே தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என கடிதம் எழுதி அதை செல்போனில் படம் பிடித்து வைத்து இருப்பது தெரிந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராதா கே.கே நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பதும் தெரிந்தது.

    மேலும் தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனை அடைந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு அதனை செல்போனில் பதிவு செய்து மாயமாகி இருப்பது தெரிந்தது.

    இதனை தொடர்ந்து மாயமான சுரேஷை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சுரேஷ் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சுரேஷின் உடல் மெரினா கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

    சுரேஷின் உடலை கைப்பற்றி கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியான வினோத் குமார் என்பவர் நேற்று முன்தினம் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் விசாரணையில் சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பதும் தெரிந்தது.
    • தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் சுரேஷ் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). வடபழனியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சுரேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ராதா, வீட்டில் இருந்த கணவரின் செல்போனை ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் "ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன். எனவே தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என கடிதம் எழுதி அதை செல்போனில் படம் பிடித்து வைத்து இருப்பது தெரிந்தது.

    இதனை கண்டு ராதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார்.

    வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான சுரேசை தேடி வந்தனர். விசாரணையில் சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பதும் தெரிந்தது.

    மேலும் தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனை அடைந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு அதனை செல்போனில் பதிவு செய்து மாயமாகி இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியான வினோத் குமார் என்பவர் நேற்று முன்தினம் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை என ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
    • சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×